பல கோடி பெறுமதியான நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் வியாபார பங்குதாரராக அடையாளம் காணப்பட்ட இசுரு பண்டாரவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த நபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (17) கைது செய்திருந்தனர்.
வாக்குமூலங்களை பெற்றுக் கொண்டதன் பின்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரைக் கைது செய்தனர்.
அதனடிப்படையில் குறித்த நபரை நாளை (19) வரை விளக்கமறியலில் கோட்டை மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.