tamilni 381 scaled
இலங்கைசெய்திகள்

துவாரகா போன்று காணொளி வெளியிட்டவர்களுக்கு சிக்கல்

Share

துவாரகா போன்று காணொளி வெளியிட்டவர்களுக்கு சிக்கல்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் எனக் குறிப்பிட்டு பெண்ணொருவர் பேசுவதைப் போன்று காணொளியை வெளியிட்ட நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் வியாழக்கிழமை (21.12.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை கூறியுள்ளார்.

குறித்த காணொளி தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகள் எனத் தெரிவிக்கப்பட்டு பெண்ணொருவர் பேசுவதைப் போன்று வெளியிடப்பட்ட காணொளி தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.

அதற்கமைய அந்த காணொளி தயாரிக்கப்பட்ட ஒரு காணொளி என்பதும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் பயங்கரவாத விசாரணைப்பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு என்பன விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.

இவ்வாறான காணொளிகளை வெளியிடுபவர்களை உடனடியாக அடையாளம் காணப்பட்டு அவர்கள் நிச்சயம் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...