நிதி மோசடி குற்றச்சாட்டு குறித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திகோ நிறுவனத்தின் தலைவர் திலினி பிரியமாலி, ஜானகி சிறிவர்தன, பொரளை சிறிசுமண தேரர் மற்றும் இசுரு பண்டார ஆகியோரை, நவம்பர் மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே, இன்று (16) உத்தரவிட்டார்.
ஸ்கைப் தொழிநுட்பம் மூலம் சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்திலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
#SriLankaNews