பிரதி சபாநாயகருக்கான தேர்வில் ஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பின்வாங்கியது. அக்கட்சியின் சார்பில் எவரும் போட்டியிடவில்லை.
பிரதி சபாநாயகரை தெரிவுசெய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு சபையில் தற்போது இடம்பெற்றுவருகின்றது.
11 கட்சிகளின் சார்பில் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவும், எதிரணியின் சார்பில் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரும் போட்டியிடுகின்றனர்.
தமது கட்சி, ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவை ஆதரிக்கும் என ஆளுங்கட்சியான மொட்டு கட்சி அறிவித்தது.
#SriLankaNews