இன்றைய காலநிலை தொடர்பில் முன்னறிவிப்பு
நாட்டின் சில பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி, இன்றைய தினம் (18.07.2023) மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என கூறப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். முன்னறிவிப்பு
- breaking news sri lanka
- Climate Change
- Department of Meteorology
- Lanka
- local news of sri lanka
- Sri
- sri lanka
- sri lanka 4k
- sri lanka cricket
- sri lanka latest news
- sri lanka news
- sri lanka sports
- Sri Lanka Tourism
- sri lanka travel
- sri lanka travel guide
- sri lanka travel vlog
- sri lanka trending
- sri lanka vlog
- sri lanka Weather
- sri lanka weather map
- sri lanka weather news
- sri lanka weather update
- sri lanka weather video
- Sri Lankan Peoples
- weather
- weather forecast sri lanka
- whats new sri lanka
Leave a comment