Untitled 1
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தின் பின்னர் டெங்கு அபாயம் அதிகரிப்பு: கடந்த வாரம் 616 டெங்கு நோயாளர்கள் அடையாளம்!

Share

நாட்டில் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களின் பின்னர் டெங்கு நோய் பரவும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்தியர் கபில கன்னன்கர எச்சரித்துள்ளார்.

கொழும்பு 07 இல் உள்ள இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் கடந்த வாரத்தில் மாத்திரம் 616 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 263 டெங்கு நோயாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 146 டெங்கு நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 57 டெங்கு நோயாளர்களும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 36 டெங்கு நோயாளர்களும், குருணாகல் மாவட்டத்தில் 26 டெங்கு நோயாளர்களும், இரத்தினபுரி மாவட்டத்தில் 68 டெங்கு நோயாளர்களும், கேகாலை மாவட்டத்தில் 20 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சீரற்ற வானிலையின் பின்னர் நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மழை காலத்தில் தான் பெரும்பாலும் டெங்கு நோய் பரவுகிறது.

மக்கள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் டெங்கு நோய் பரவும் வாய்ப்பு அதிகரித்துள்ளமை பாரதூரமான விடயமாகும்.

எனவே டெங்கு அபாயமிக்க பகுதிகளில் டெங்கு நோய்க்கான விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Kerala Drugs
இலங்கை

எரித்து அழிக்கப்பட கேரள கஞ்சா.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில்...

question mark
இலங்கை

செல்வந்தர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி.

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை காவல்துறையினர் அண்மையில் கோரியிருந்த...

Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய நெருங்கிய உறவினர்!

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக...

dengue original 1
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்வு.

அண்மையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின்...