உச்சத்தை தொடும் டெங்கு!

201371 dengue

கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை உச்ச மட்டத்தை எட்டும் என பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி எச்சரித்துள்ளார்.

வருடத்தின் இறுதி மூன்று மாதங்களிலும் அடுத்த வருடத்தின் ஆரம்பத்திலும் டெங்கு தீவிரமடையும் என்றார்.

தெஹிவளை, கல்கிசை, கோட்டே மற்றும் கொலன்னாவ போன்ற பகுதிகளில் தற்போது தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்களின் படி, இந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் 586 தொற்றாளர்கள் பதிவாகியிருந்தனர். மேலும் நாடு முழுவதும் இதுவரை 49,000 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Exit mobile version