” 19 ஆம் திகதி நடைபெறும் நாடாளுமன்ற அமர்வின்போது நிச்சயம் பதவி துறப்பேன்.”
இவ்வாறு இன்று அறிவித்தார் பிரதி சபாநாயகரும், சுதந்திரக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய.
பிரதி சபாநாயகர் பதவியை ஏற்கனவே இராஜினாமா செய்யும் முடிவை அவர் எடுத்திருந்தாலும், ஜனாதிபதி விடுத்த கோரிக்கையால் அந்த முடிவை தற்காலிகமாக மாற்றினார்.
இந்நிலையிலேயே முடிவை மாற்றி இன்று மேற்படி அறிவிப்பை விடுத்தார்.
#SriLankaNews