நெல் கொள்வனவு தொடர்பில் எடுத்துள்ள தீர்மானம்
இலங்கைசெய்திகள்

நெல் கொள்வனவு தொடர்பில் எடுத்துள்ள தீர்மானம்

Share

நெல் கொள்வனவு தொடர்பில் எடுத்துள்ள தீர்மானம்

நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக மீண்டும் நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரசாங்க விலைக் குழுவின் தீர்மானத்தின் பிரகாரம் நாட்டு அரிசி 95 ரூபாவுக்கும் கீரி சம்பா அரிசி தலா 110 ரூபாவுக்கும் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நெல் கொள்வனவுக்காக அரசாங்கத்திடம் இருந்து பெறப்படும் பணத்திற்கு ஏற்ப கொள்வனவுகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

கடந்த பருவத்தில் அரசாங்கம் நெல் கொள்வனவு செய்ய 13 ஆயிரம் கோடி ரூபாவை ஒதுக்கியதையடுத்து நெல் சந்தைப்படுத்தல் சபை நெல் கொள்வனவு செய்வதை நிறுத்திவிட்டு மாவட்ட அரசாங்க அதிபர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் மூலம் நெல்லை கொள்வனவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தீர்மானத்தின் பிரகாரம் கொள்வனவு செய்யப்பட்ட நெல்லில் இருந்து பதப்படுத்தப்பட்ட அரிசி 29 இலட்சம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 கிலோ அரிசி விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...