இலங்கை கடன் மறுசீரமைப்பில் சீனா உதவி
இலங்கைசெய்திகள்

இலங்கை கடன் மறுசீரமைப்பில் சீனா உதவி

Share

இலங்கை கடன் மறுசீரமைப்பில் சீனா உதவி

இலங்கையின் மிகப் பெரிய இருதரப்புக் கடன் கொடுனரான சீனா, சர்வதேச நாணய நிதியத்தின் முதல் மீளாய்வுக்கு முன்னர் இலங்கைக்கு கடன் மறுசீரமைப்பில் உதவும் என்று பீடிஐ தெரிவித்துள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள், வெளி மற்றும் உள் கடன்களான 41 பில்லியன் டொலர்களை மறுசீரமைப்பதற்கான சவால் எதிர்கொள்ளப்படும் நிலையில் சீனா இலங்கைக்கு உதவ உள்ளதாக பீடிஐ குறிப்பிட்டுள்ளது.

2.9 பில்லியன் டொலர்களில் இலங்கைக்கு அடுத்தக்கட்ட நிதியுதவியை வழங்குவதற்காக, இந்த ஆண்டு செப்டம்பர் 11 முதல் 19 வரையான காலத்தில் சர்வதேச நாணய நிதியம் அதன் முதல் மதிப்பாய்வை நடத்த உள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் மீளாய்வுக்கான நிபந்தனையை பூர்த்தி செய்ய இலங்கை தற்போது அதன் வெளி கடனாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்தநிலையில் ஜூன் மாத இறுதி வரை நிகழ்ச்சித் திட்டத்தின் செயல்திறனைக் கருத்தில் கொண்டு, முதல் மதிப்பாய்வில் நிர்வாகக் குழு மற்றும் பணியாளர்கள் இருவராலும் அங்கீகரிக்கப்பட்டால், இலங்கைக்கு சுமார் 338 மில்லியன் டொலர்கள் கிடைக்கும் என்றும் பீடிஐ தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...