26 9
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கொலை மிரட்டல்

Share

தனக்கு கொலை மிரட்டல் வந்ததாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார தெரிவித்துள்ளார்.

ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“கடந்த 14ஆம் திகதி பெயர் குறிப்பிடப்படாத கடிதம் ஒன்றின் மூலம் எனக்கு கொலை மிரட்டல் வந்தது.

குறித்த கடிதத்தில், மதவாச்சி மற்றும் கெபிதிகொல்லாவ பிரதேச சபைகள் தொடர்பாக, மேலும் அரசியல் நடவடிக்கை எடுக்கவோ அல்லது அதிகாரத்தைப் பெற முயற்சிக்கவோ வேண்டாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

அத்துடன், இரண்டு உள்ளூராட்சி மன்றங்களும் ஏற்கனவே நிறுவப்பட்டதாகவும் மேற்கொண்டு முயற்சித்தால் அது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் கடிதத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

குறித்த கடிதம் முத்திரை இன்றி வந்துள்ளது. எனவே, தபால் அதிகாரி ஒருவரின் உதவி இன்றி இதனை செய்திருக்க முடியாது.

இது தொடர்பில் நான் பொலிஸாரிடமும் முறைப்பாடு செய்துள்ளேன். கடந்த காலங்களில், குறிப்பாக எங்களின் சிறுவயது பராயத்தில் இவ்வாறான மிரட்டல் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களே இன்று ஆட்சியில் உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
32 5
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியினை விட்டு வெளியேறுவதாக யாழ். உறுப்பினர் பகிரங்க அறிவிப்பு

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, தேசிய மக்கள் சக்தியின் அடிப்படை உறுப்பினர் ஒருவர் தனது பதவியில் இருந்து விலகுவதாக...

31 5
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (16) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின்...

6 19
இலங்கைசெய்திகள்

முற்றாக முடங்கி போன உப்பு உற்பத்தி

2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் உப்பு உற்பத்தி முற்றாக முடங்கிப் போயுள்ளதாக உப்புக்கூட்டுத்தாபன தலைவர் நந்தனதிலக...

19 12
இலங்கைசெய்திகள்

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவையின் விசேட அனுமதி

நாட்டில் நிலவும் உப்புத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் உப்பு இறக்குமதிக்கான விசேட அனுமதியொன்றை அமைச்சரவை வழங்கியுள்ளது. அதன்...