தாக்குதலுக்கு இலக்கான வயோதிபப் பெண் மரணம்!

வயோதிபப் பெண் மரணம் 1 1

யாழ்., நெல்லியடி – வதிரிப் பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறின்போது தாக்குதலுக்கு இலக்கான 76 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று அயல் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறின்போது இவர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

தலையில் தாக்கப்பட்ட நிலையில் குறித்த பெண் நேற்று முற்பகல் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் இருவர் நெல்லியடிப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

நெல்லியடிப் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

 

Exit mobile version