யாழில் குழந்தை பிரசவித்த பெண் கொரோனாவால் உயிரிழப்பு!

corona death 3

யாழில் குழந்தை பிரசவித்த பெண் கொரோனாவால் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் குழந்தை பிரசவித்த மேலும் ஒரு பெண் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் உயிரிழந்துள்ளார்.

அளவெட்டி வடக்கைச் சேர்ந்த (வயது–42) சதீஸ் அபிமினி என்ற பெண் யாழ்.போதனா மருத்தவமனையில் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர்  பெண் குழந்தையை பிரசவித்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

அவரது பெண் குழந்தை நலமுடன் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

Exit mobile version