நீரில் மூழ்கி உயிாிழப்பு!

download 4 1 16

மல்லாவி – வவுனிக்குளத்தில்  இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி  உயிரிழந்தனர். இன்று பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மல்லாவியில் நடந்த மரணச் சடங்கில் கலந்து கொள்ளச் சென்ற யாழ் இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்தனர்.

கொக்குவில் பகுதியில்  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 27வயது அண்ணன், 16வயதான தம்பி இருவரும் வவுனிக்குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

சடலம் மல்லாவி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.  பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#srilankaNews
Exit mobile version