முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார்.
இவர் திடீர் சுகவீனம் காரணமாக மூங்கிலாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இறந்தவரின் உடல் புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் அவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு மூங்கிலாறு பகுதியைச் சேர்ந்த (வயது–26) இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இதேவேளை புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் இதுவரை 16 கொரோனா இறப்புக்கள் பதிவாகியுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment