’21’ஐ தோற்கடிக்க சூழ்ச்சி! – சு.க. குற்றச்சாட்டு

தயாசிறி ஜயசேகர

அரசமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டமூலத்தை தோற்கடிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி. தெரிவித்தார்.

இதன் ஓர் அங்கமாகவே, தற்போதைய சூழ்நிலையில் உணவுதான் முக்கியம், அரசமைப்பு மறுசீரமைப்பு அவசியமில்லை என்ற பரப்புரை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, 21 ஆவது திருத்தச் சட்டமூலம் கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தினார்.

#SriLankaNews

Exit mobile version