எதிர்வரும் மாதங்களில் இலங்கையில் ஏற்படப்போகும் அபாய நிலைமை
மின் உற்பத்தியை விடவும் உணவு உற்பத்தி முக்கியமானது என்பதை அதிகாரிகள் விளங்கிக் கொள்ள வேண்டும் என விவசாயத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
வரட்சியான காலநிலைக்கு மத்தியில் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாய்ச்சல் முடக்கப்பட்டுள்ளதால் எதிர்வரும் மாதங்களில் அரசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் பூலோக தாக்கங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் எதிர்காலங்களில் நாடுகளுக்கு இடையிலான உணவு ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகள் மட்டுப்படுத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Leave a comment