24 663843e902eeb
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பெண்களுக்கு ஆபத்தாக மாறிய கும்பலை தேடும் பொலிஸார்

Share

இலங்கையில் பெண்களுக்கு ஆபத்தாக மாறிய கும்பலை தேடும் பொலிஸார்

நாட்டின் பல பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் சென்று கூரிய ஆயுதங்கள் மூலம் பெண்களின் தங்க நகைகளை திருடும் கும்பலை கைது செய்ய பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நுகேகொட, மஹரகம, களுத்துறை, கல்கிஸ்ஸ, பிலியந்தலை, பண்டாரகம உள்ளிட்ட பல பிரதேசங்களில் இந்த கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதற்கமைய, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இது தொடர்பான திருட்டில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்துள்ளனர்.

கம்புருகமுவ பகுதியை சேர்ந்த படா என அழைக்கப்படும் ஜானக சஞ்சீவ என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் நடத்திய விசாரணையின் பின்னர் திருடப்பட்ட 19 தங்க சங்கிலிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
image 1000x1000 4
செய்திகள்இலங்கை

ஸ்ரீலங்கன் விமானத்தில் இருந்து பிரபல பாடகர் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்

டுபாய்க்குப் பயணிக்கவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்து இலங்கையின் பிரபல பாடகர் சாமர ரணவக்க என்பவர்...

image 1000x1000 3 1
செய்திகள்இலங்கை

பாடசாலை செல்லாத கோபம்: மாணவியைத் தாக்கிய அதிபர் மீது காவல்துறை விசாரணை

ஒரு நாள் பாடசாலைக்குச் செல்லாததால் ஏற்பட்ட கோபத்தில், மாணவி ஒருவரைத் தடியால் தாக்கியதாகக் கூறப்படும் அதிபர்...

image 1000x1000 2
செய்திகள்இலங்கை

கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்திக்கு ஊடகங்கள் அளித்த முக்கியத்துவம் – பேராசிரியர் கடும் விமர்சனம்

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின் முக்கிய சூத்திரதாரியான இஷாரா...

image 1000x1000 1
செய்திகள்இலங்கை

கோர விபத்து: அநுராதபுரத்தில் யாழ் பெண் உட்பட இருவர் பலி, 8 பேர் காயம்

அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்தின்...