இலங்கைசெய்திகள்

கொழும்பில் ஆபத்தாக மாறியுள்ள கட்டடம் – உயிர் அச்சத்தில் மக்கள்

Share
1 18
Share

கொழும்பில் ஆபத்தாக மாறியுள்ள கட்டடம் – உயிர் அச்சத்தில் மக்கள்

கொழும்பு கோட்டையிலுள்ள கிரிஷ் கட்டடத்தின் பாதுகாப்பற்ற தன்மை தொடர்பில் நீதிமன்றில் அறிவிக்கவுள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கட்டடத்திலிருந்து நேற்றும் இரும்பு பகுதி இடிந்து விழுந்துள்ளது.

கொழும்பு கோட்டை பகுதியில் அமைந்துள்ள 55 மாடிகளைக் கொண்ட கிரிஷ் கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் முழுமையாக்கப்படாமல் கைவிடப்பட்டுள்ளதால் சுற்றுவட்டாரப் பகுதியில் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அந்த பகுதி மக்கள் பல தடவைகள் சுட்டிக்காட்டிய போதும் அதிகாரிகள் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

கொழும்பில் ஆபத்தாக மாறியுள்ள கட்டடம் – உயிர் அச்சத்தில் மக்கள் | Danger Bullying In Colombo Krrish Tower

நேற்று பிற்பகலும் கிரிஷ் கட்டடத்தின் மேல் பொருத்தப்பட்டிருந்த இரும்பு மூடியின் ஒரு பகுதி உடைந்து விழுந்தது.

குறித்த கட்டடத்தில் ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலைமை தொடர்பில் கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியதுடன், இது தொடர்பில் இன்று நீதிமன்றில் அறிவிக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஒக்டோபர் 6ஆம் திகதி, காரொன்றின் மீது இரும்புப் பகுதி ஒன்று வீழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

மேலும், கடந்த 7ஆம் திகதி, யார்க் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது, மற்றொரு பகுதி இடிந்து விழுந்து, கடந்த 8ஆம் திகதி இரவு, அந்த இடத்தில் இருந்து அலுவலக பணியாளர்கள் மற்றும் வாகனங்கள் சென்ற போது, இரும்பு பகுதி இடிந்து விழுந்தது.

இவ்வாறான நிலையில் அந்தப் பகுதி வாழ் மக்களுக்கு உயிர் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...