இலங்கைக்குள் இந்திய இராணுவம் நுழைய முற்பட்டால் காத்திருக்கும் பெரும் ஆபத்து
இலங்கைக்குள் இந்திய இராணுவம் நுழைய முற்பட்டால் பெரும் ஆபத்து ஏற்படும் என பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி. அருஸ் தெரிவித்துள்ளார்.
தென் சீனக்கடலில் சீனாவிற்கும் பிலிப்பைன்ஸிற்கும் இடையில் தொடரும் பிரச்சினையில் தற்போது இந்தியா தலையிட்டுள்ள நிலையில், அதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதனை மீறி இந்தியா தலையிடுமானால் அதற்கு பதிலடியாக கச்சதீவை சீனா கைப்பற்றுமானால் அது இந்தியாவிற்கு பெரும் ஆபத்தாக அமையும்.
இவ்வாறான பின்னணியில் இலங்கையிடமிருந்து கச்சதீவை இந்தியா பெறுவதென்பது இயலாத விடயம் என்றும், இலங்கைக்குள் இந்திய இராணுவம் நுழைய முற்பட்டால் பெரும் ஆபத்தாக அமையும் என்றும் கூறியுள்ளார்.