FB IMG 1655223523141
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வெருகலில் கடும் காற்றால் 38 வீடுகள் பகுதியளவில் சேதம்!

Share
திருகோணமலை – வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உப்பூரல் பகுதியில் வீசிய காற்றால் 38 வீடுகள் சேதமடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
உப்பூரல் பிரதேசத்தில் பலத்த மழையுடன் வீசிய காற்றால் மேற்படி வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் மீனவர்களின் வள்ளங்கள் சிலவும் உடைந்துள்ளன.
இதேவேளை, மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் சேதமடைந்துள்ளது.
பலத்த காற்றுடன் கூடிய மழையால் ஏற்பட்ட சேத விபரங்களை வெருகல் பிரதேச செயலகம் ஊடாகத் திரட்டி வருவதாகவும், இதுவரைக்கும் 38 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன எனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் திருகோணமலை மாவட்ட உதவிப் பணிப்பாளர் குகதாஸ் சுகுணதாஸ் தெரிவித்தார்.
அத்துடன் பாதிப்புக்குள்ளானவர்கள் குறித்து தகவல்களைப் பெற்று மாவட்ட அரச அதிபரின் ஆலோசனையின் பேரில் வெருகல் பிரதேச செயலாளரின் உதவியுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.
#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...