பிரதமராக டலஸ்?

Dullas Alahapperuma

” இடைக்கால அரசின் பிரதமராக டலஸ் அழகப்பெரும நியமிக்கப்பட வேண்டும்.” – என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இடைக்கால அரசமைக்க தற்போதைய பிரதமர் பதவி விலக வேண்டும். அதன்பின்னர் மொட்டு கட்சி உறுப்பினர் ஒருவரே பிரதமராக பதவியேற்க வேண்டும். அந்த பிரதமர் டலஸாக வேண்டும் என்பதே எனது கோரிக்கை.

எமது அரசும் தவறிழைத்துவிட்டது. அதனால்தான் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். கடந்த ஆட்சியிலும் குறைகள் இடம்பெற்றுள்ளன. எனவே, நாட்டுக்காக அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்.” – என்றார்.

#SriLankaNews

Exit mobile version