tamilni 146 scaled
இலங்கைசெய்திகள்

​இன்றைய ராசி பலன் 12.11.2023 – Today Rasi Palan – இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

Share

​இன்றைய ராசி பலன் 12.11.2023 – Today Rasi Palan – இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

இன்றைய ராசிபலன் நவம்பர் 12, 2023, சோபகிருது வருடம் ஐப்பசி 26 ஞாயிற்றுக் கிழமை, சந்திரன் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார். மீன ராசியில் உள்ள ரேவதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை ஜோதிட நிபுணர் பாரதி ஸ்ரீதர் அவர்கள் கணித்துக் கூறியுள்ளார்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று சந்திர பகவான், சூரியனுடன் சேர்ந்து இருப்பதால் நல்ல ஒரு மண வாழ்க்கையும், குடும்பத்தில் அமைதியின் நிலவும். குடும்பத்தில் இருக்கக்கூடிய திருமணத்தடைகள் மற்றும் பெரியவர்களின் உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் தீர மாலை நேரத்தில் பைரவருக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்யவும்.
ஞாயிற்றுக்கிழமை ஆன இன்று பைரவருக்கு தீபம் ஏற்று வழிபாடு செய்யலாம்.இன்று கேதார கௌரி விரதம் இருந்து அம்மனை வழிபடுவதும் சிறப்பானது.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மன நிறைவு தரக்கூடிய நாளாகவும், வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கக்கூடியதாகவும் இருக்கும். சிறிய தொழில் செய்பவர்களுக்கு வெற்றியும் லாபமும் உண்டாகும். இன்று எண்ணிய காரியங்கள் நிறைவேறும்.மாதங்களாக இழுபறியிலிருந்து வந்த வேலைகள் நிறைவேறும். இந்த இனிய தீபாவளி நாளில் மாலை நேரத்தில் குலதெய்வ பிரார்த்தனையும், லட்சுமி குபேர பூஜையும் செய்யலாம்.
​ரிஷபம் கார்த்திகை மாத ராசி பலன் 2023​

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று மனநிறைவு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். காரியத்தில் வெற்றிகள் உண்டாகும். பல மாதங்களாக இருந்து வந்த மனக்குறைகள் நீங்கும். இன்று தனலாபங்கள் சிறப்பாக ஏற்படும். ஒற்றுமை ஓங்கும். சந்திர பகவானின் சஞ்சாரம் ஐந்தாம் இடத்தில் இருப்பதால் பிள்ளைகளால் ஒற்றுமை மேம்படும். அன்னதானங்கள் செய்வது நல்லது.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மனதிற்கு தரக்கூடிய நாளாக அமையும்.எடுத்த காரியத்தில் வெற்றிகள் உண்டாகும். பல நாட்களாக இருந்து வந்த மனச்சோர்வுகள் நீங்கும்.இன்று உங்களின் ராசிநாதன் சூரியனுடன் சேர்ந்து இருப்பதால் விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்யவும். இன்று நீங்கள் அன்னதானமும், வஸ்திர தானமும் செய்ய நல்ல மகாலட்சுமி யோகம் உண்டாகும்.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று ராசிநாதன் சூரியன் நீசம் பெற்று இருப்பது உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. இன்றைய நாளில் மன அமைதியும், நிம்மதியும் உண்டாகும். குழந்தை இல்லாதவர்கள் குலதெய்வ பிரார்த்தனை செய்வதாலும் குழந்தை பாக்கியம் உண்டாகும். இன்று உங்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் குதூகலமான நாளாக அமைகிறது. கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், மன அமைதியும் கூடிய தித்திக்கும் தீபாவளி ஆக அமையும். பெரியவர்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று நண்பர்களின் வருகை மனநிறைவைத் தரும். விசாகம் மற்றும் சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு பிள்ளைகளால் லாபமும், மன உறுதி ஏற்படும். பய உணர்வு நீங்க கூடிய நாளாக அமைகிறது. நீங்கள் நினைத்த வேலைகள் சிறப்பாக செய்து முடித்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள் குடும்பத்தில் ஆனந்தம் தவழும்.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மனபாரங்கள் தீரக்கூடிய நாளாக இருக்கும். எடுத்த காரியத்தில் உறுதியும், மனத்திருப்தியும் உண்டாகும்.இன்று உங்களுக்கு காலை வேலையில் நற்செய்திகள் காத்திருக்கிறது. குடும்ப செலவுகள் தவிர்க்க முடியாத ஒன்றாக அமையும். விருச்சிக ராசியினர் இன்று விநாயகர் வழிபாடு செய்வது அவசியம்.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மன நிறைவு கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். வியாபாரங்கள் குறையும். இன்று காலை வேலையில் கிடைக்கக்கூடிய நற்செய்திகள் உங்கள் மன மகிழ்ச்சியை அதிகரிக்கும். திருமணத்தடைகள் நீங்கும்.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களிலும், வேலை முயற்சிகளிலும் இன்று நல்ல தகவல் கிடைக்கும். தீபாவளி திருநாளான இன்று அன்னதானங்கள் மேற்கொள்வது நல்லது. சிவபெருமான ஆலயத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யவும். இன்று காலை வேளையில் நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகளுக்கு வெற்றியும் மனநிறையும் கிடைக்கும்.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மகிழ்ச்சியான நாளாக அமையும். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். மனதளவில் இருக்கக்கூடிய பாரங்கள் விலகும்.இன்றைய நாளில் நீங்கள் எண்ணிய காரியங்கள் நிறைவேறும்.பல மாதங்களாக இருந்து வந்த குடும்ப சுமைகள் நீங்கும்.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று சகோதர சகோதரிகள் உள்ளன உறவு பலப்படும். பல நாட்களாக இருந்து வந்த குடும்ப சண்டைகளுக்கு நல்ல தீர்வும் ஒற்றுமையும் மேம்படும். சொத்து தகராறுகள், சொத்து சார்ந்த பிரச்சனைகள் நீங்கி மனநிம்மதி உண்டாகும். இன்றைய நாளில் காலை வேளையில் நற்செய்திகள் காத்திருக்கிறது. சுப செலவுகள் என்று தவிர்க்க முடியாததாக இருக்கும்.

ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமமாக இருப்பதால், பசு மாடுகளுக்கு உணவு அளிக்கவும். இனிய காரியங்கள் நிறைவேறும்.

Share
தொடர்புடையது
ahr0chm6ly9jyxnzzxr0zs5zcghkawdp 4
உலகம்செய்திகள்

துப்பாக்கியைப் பிடுங்கிய ‘ஹீரோ’ அஹமது அல் அஹமதுவைச் சந்தித்த பிரதமர் அல்பானீஸ்; துப்பாக்கிக் கட்டுப்பாடு மேலும் அதிகரிப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் (Bondi Beach) யூதர்கள் நிகழ்வில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின்போது, துணிச்சலுடன்...

coverimage 01 1512114047 1546165239 1562741874
இலங்கைசெய்திகள்

இலங்கையில் எயிட்ஸ் தொற்று 6% அதிகரிப்பு:உயிரிழப்புகள் 30 ஆகப் பதிவு!

இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில்...

images 5 5
உலகம்செய்திகள்

இந்தியா-ரஷ்யா இராணுவ ஒப்பந்தம்: ‘தளவாட ஆதரவு பரஸ்பரப் பரிமாற்ற’ சட்டத்துக்குப் புட்டின் ஒப்புதல்!

இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான ‘Reciprocal Exchange of Logistics Support’ (தளவாட ஆதரவின் பரஸ்பரப்...

articles2FvNVHzqk0rGKKgejyoUzJ
இலங்கைசெய்திகள்

கல்வி ஒத்துழைப்பு வலுப்படுத்தல்: வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த...