tamilni 19 scaled
இலங்கைசெய்திகள்

மனோ கணேசன் எம்.பியை புறக்கணித்த இ.தொ.கா கட்சி!

Share

மனோ கணேசன் எம்.பியை புறக்கணித்த இ.தொ.கா கட்சி!

எனது மாவட்டம் தலைநகர் கொழும்பில் நடைபெறும், “நாம்-200” என்ற விழா சிறப்புற வாழ்த்துகிறேன். எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதால் விழாவில் கலந்துகொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன் என தமிழர் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,இதுபற்றி அறிந்துக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, “நான் என் கையெழுத்தில், உடனடியாக அழைப்பு கடிதம் அனுப்புகிறேன். கலந்துக்கொள்ளுங்கள்”. என்று கூறினார்.

“உங்கள் அரசாங்க கட்சிகள் விழாவாக இது நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை நன்கு விளங்குகின்றது. ஆகவே, அங்கே வந்து அதில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட நான் காரணமாக இருக்க விரும்பவில்லை. ஆகவே நான் கலந்துக்கொள்ள வில்லை” என ஜனாதிபதியின் கருத்தை நாகரீகமாக நான் மறுத்து விட்டேன்.

பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் ஒரு விசேட குழுவை, இந்திய வம்சாவளி மலையக மக்கள் தொடர்பில் அமைத்தமை தொடர்பில் அதிகாரபூர்வமாக அறிவிப்பதாகவும், அக்குழுவில் பங்கு பெற்று உங்கள் யோசனைகளை முன் வையுங்கள் என ஜனாதிபதி விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

உங்கள் அரசாங்கம் மக்கள் தொடர்பில் செய்யும் நல்ல காரியங்களை நாம் எப்போதும் வரவேற்போம் என பதிலளித்தேன்.

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர், கொழும்பு மாவட்ட எம்.பி என்ற முறைகளில் எனக்கு அழைப்புகள் தரப்படாவிட்டாலும்கூட, இந்நிகழ்வுக்கு அழைக்கப்பட்ட இந்திய, தமிழக அரசியல் தலைவர்களை “வருக, வருக” என இலங்கை நாட்டுக்கும், தலைநகர் கொழும்புக்கும் வரவேற்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
27 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எண்ணெய் மற்றும் தேங்காய் விலை உயர்வு: பேக்கரி மற்றும் உணவு உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்பு!

உள்நாட்டுச் சந்தையில் பாம் ஒயில் (Palm Oil) மற்றும் தேங்காய் உள்ளிட்ட அத்தியாவசிய எண்ணெய் பொருட்களின்...

26 6
செய்திகள்உலகம்

மைக்கேல் ஜாக்சன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள்: எஸ்டேட் மற்றும் காசியோ குடும்பத்தினரிடையே சட்டப் போர் தீவிரம்!

மறைந்த பாப் இசை மேதை மைக்கேல் ஜாக்சன் மீது, ஃபிராங்க் காசியோ மற்றும் அவரது உடன்பிறப்புகள்...

25 6
செய்திகள்உலகம்

உலகின் வலிமையான ‘T1200’ கார்பன் ஃபைபரை அறிமுகப்படுத்தியது சீனா: விண்வெளித் துறையில் புதிய மைல்கல்!

சீனா தனது உள்நாட்டுத் தயாரிப்பான T1200-தரத்திலான அதி-உயர்-வலிமை கார்பன் ஃபைபரை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அரசுக்குச்...

24 9
செய்திகள்உலகம்

சீனாவின் புதிய ‘இன ஒற்றுமை’ சட்டம்: சிறுபான்மையினரின் கலாச்சார அடையாளத்திற்கு அச்சுறுத்தலா?

சீனா அண்மையில் “இன ஒற்றுமையை” மேம்படுத்துவதாகக் கூறி புதிய சட்டமொன்றை அங்கீகரித்துள்ளது. ஹான் சீனர்களின் ஆதிக்கம்...