rtjy 68 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் போலியான மருந்து விற்பனை

Share

இலங்கையில் போலியான மருந்து விற்பனை

சுகாதார அமைச்சுக்கு போலியான மனித இம்யூனோகுளோபுலின் குப்பிகளை விற்றதாகக் கூறப்படும், இலங்கை நிறுவனமான Isolez Biotech Pharma AG (Pvt) Ltd. உத்தியோகபூர்வ வழிகள் மூலம், மனித இரத்த பிளாஸ்மாவை உற்பத்தி செய்வதற்குத் தேவையான மருந்துகளையோ அல்லது மூலப்பொருளையோ இறக்குமதி செய்யவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில் நிறுவனத்தின் உரிமையாளர் ஹேவகே சுதத் ஜானக பெர்னாண்டோ இந்த வாரம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆனால், சர்ச்சைக்குரிய கேள்விப்பத்திரத்துக்கு முத்திரையிட்டு பணத்தை; செலுத்திய சுகாதார அமைச்சு அல்லது தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

7,500 மனித இம்யூனோகுளோபுலின் பொதிகளுக்கான முதல் மேற்கோளை ஐசோலெஸ் 12 மாதங்களுக்கு முன்பு, அக்டோபர் 2022 இல் சுகாதார அமைச்சகத்தின் மருத்துவ விநியோகப் பிரிவில் (MSD) சமர்ப்பித்தது.

இதற்கான செலவு 975,000 டொலர்கள் அதாவது 316 மில்லியன் ரூபாய்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த குப்பிகள் ஜூலை மாதம் மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்பட்டன. இதற்கிடையில் மனித இம்யூனோகுளோபுலினுக்கான ‘மூலப்பொருட்களை’ இறக்குமதி செய்ய குறித்த நிறுவனம் திட்டமிட்டிருந்ததை சுகாதார அமைச்சின் கூடுதல் செயலாளர் மேற்கோள்கள் காட்டியுள்ளன.

எனினும் 2022 மற்றும் 2023க்கான சுங்கத் தரவுகள், உத்தியோகபூர்வ வழிமுறைகள் மூலம் இலங்கைக்கு இரத்த பிளாஸ்மாவை இறக்குமதி செய்த நிறுவனங்களின் பட்டியலில் இந்த நிறுவனம் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

இம்யூனோகுளோபுலின், சில நோயாளிகளுக்கு பாதகமான எதிர்விளைவுகளை ஏற்படுத்திய பின்னரே மருந்து பற்றிய சந்தேகங்கள் எழுந்தன. இதேவேளை இந்த குப்பிகளின் உள்ளடக்கம் என்ன என்பது இன்னும் தெரியவில்லை.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...