3 41
இலங்கைசெய்திகள்

பேராபத்தில் சிக்கப்போகும் சிறீதரன் : திடீரென மாற்றப்பட்ட மெய்ப்பாதுகாவலர்

Share

பேராபத்தில் சிக்கப்போகும் சிறீதரன் : திடீரென மாற்றப்பட்ட மெய்ப்பாதுகாவலர்

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் (S. Shritharan) மெய்ப்பாதுகாவலர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை திட்டமிடப்பட்ட அரசியல் சதி என பிரித்தானிய அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் (T.Thibakaran) சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “சிறீதரன் தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்படுவதற்கான சூழ்நிலை அதிகமாகவுள்ளது.

இந்தநிலையில், இதனை தடுக்க தற்போது அவருக்கு எதிராக நடத்தப்படும் சதிகளுக்கு எதிராக மக்களை திரட்டி தனக்கு நீதி கோரி அவர் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தால் அவரது அரசியல் நிலைநிறுத்தப்படும்.

கட்சி தன்னை புணர்நிர்மாணம் செய்வதற்கும், தனக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அரசியல் சதி வேலைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கான வாய்ப்பு மக்கள் போராட்டம் மட்டும் தான் அல்லது சட்ட ரீதியாக அவர் தனது நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
22 3
செய்திகள்இலங்கை

அயதுல்லா அலி கமேனியின் மறைவு: கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தில் அமைச்சர் விஜித ஹேரத் இரங்கல்!

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின்...

20 2
உலகம்செய்திகள்

மில்லியன் கணக்கான மக்கள் திரள்வர் என எதிர்பார்ப்பு: அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின்...

19 1
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்: ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழு கடும் கண்டனம்!

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின்...

18 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் சரியானது: அமெரிக்க வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன் மாஸ்ட் அதிரடி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன்...