நாட்டில் மேலும் 1083 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சுகாதார விதிகள் தொடர்பில் ஆராய சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொண்டபோதே ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை நாட்டில் 66 ஆயிரத்து 730 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.