கொழும்பு வடக்கு, தெற்கு, மத்திய, நுகேகொடை ஆகிய பகுதிகளில் இன்று நள்ளிரவு 12 மணிமுதல் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதனைப் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்துக்கு வெளியே இன்று மாலை முதல் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாகவே கொழும்பு வடக்கு, தெற்கு, கொழும்பு மத்திய மற்றும் நுகேகொட பொலிஸ் பிரிவுகளில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, களனி மற்றும் கல்கிஸை பொலிஸ் பிரிவுகளிலும் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment