ZvmMAMNmcmEz9ZOEfR3K
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ரைஸ் குக்கர் மூடியால் சிறுமியின் முகத்தில் சுட்ட கொடூர தந்தை!!

Share
6 வயதுடைய மகளின் முகத்தில் ரைஸ் குக்கரின் மூடியால் தந்தையொருவர் சுட்ட சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பின்வத்த பொலிஸார் தெரிவித்தனர்.

பின்வத்தை வடுபாசல் தோட்டம் பிரதேசத்தில் வசிக்கும் சிறுமி ஒருவர் தனது தாயுடன் வந்து இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

தீக்காயங்களுடன் சிறுமி நேற்று இரவு தனது தாயுடன் பொலிஸில் முறைப்பாடு செய்து பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அன்று இரவு சிறுமி வீட்டில் சமைத்துக்கொண்டிருந்த போது, சந்தேக நபர் இரவு 7.45 மணியளவில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, ​​சிறுமியின் தாய் அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.

சந்தேகநபர் ரைஸ் குக்கரின் மூடியைத் திறந்து, “ஏன் இவ்வளவு சாதம் சமைக்கிறாய்?” எனக் கூறி ரைஸ் குக்கரின் மூடியை சிறுமியின் முகத்தில் வைத்துள்ளதாக சிறுமி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

முகம் மற்றும் கன்னங்களில் தீக்காயங்களுக்கு உள்ளான சிறுமி உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் பின்வத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...