கோடிக்கணக்கில் பண மோசடி! – சீன பிரஜைகள் கைது

Arrested

பல்வேறு நாடுகளில் வசிக்கும் மக்களின் கணக்குகளில் இருந்து மில்லியன் கணக்கான பணத்தை இணையத்தளம் மூலம் மோசடி செய்த சீன பிரஜைகள் 39 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர்

தூதரகங்கள் ஊடாக பெறப்பட்ட முறைப்பாடுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த குழுவினர், சனிக்கிழமை (01) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

அளுத்கம களுவாமோதர பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் வாடகை அடிப்படையில் பல மாதங்களாகத் தங்கியிருந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டு அளுத்கம பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செய்யப்பட்டுள்ளனர்.

கணினிகள், மதிப்பு மிக்க திறன்பேசிகள் மற்றும் பெருந்தொகை பணத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் அளுத்கம பொலிஸார் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

Exit mobile version