தென் மாகாணத்தில் களமிறங்கிய அதிரடிப்படை
இலங்கையின் தென் மாகாணத்தில் பாதாளக் குழுக்களின் அட்டகாசம் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தினந்தோறும் அவர்களுக்குள் மோதல்கள் மற்றும் கொலை சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.
கொழும்புக்கு தப்பியோட்டம்
எனவே இவர்களைக் கட்டுப்படுத்தி கொலையாளிகளைக் கைது செய்வதற்காகப் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் களத்தில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிரடிப் படையினருக்கு பயந்து தென் மாகாணத்தைச் சேர்ந்த அதிகமான பாதாளக் குழுவினர் கொழும்புக்கு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave a comment