தொழில் முயற்சியாளர்களுக்கு கடன்!

loan to fulfill financial need

வியாபார நடவடிக்கைகளுக்காக கடன் வசதிகள் தேவைப்படுகின்ற சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு 11 முதல் 12 வீதம் வரையிலான குறைந்த வட்டியுடனான கடன் வழங்கும் வேலைத்திட்டம் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மூலதன தேவைப்பாடுகள் உள்ள, விவசாயம், சுற்றுலா, ஏற்றுமதி மற்றும் உற்பத்தித் துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வியாபார சமூகத்தினருக்கு, இத் திட்டத்தின் கீழ் 100 மில்லியன் ரூபாய் வரை கடனைப் பெற்றுக்கொள்ள முடியும்.

குறித்த கடன் திட்டத்திற்காக, இலங்கை வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி, ஹட்டன் நஷனல் வங்கி, கொமர்ஷல் வங்கி, செலான் வங்கி, தேசிய அபிவிருத்தி வங்கி, நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி மற்றும் சம்பத் வங்கி ஆகிய எட்டு நிதி நிறுவனங்களுக்கு 4,900 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நேற்று (20) பாராளுமன்றத்தில் இந்த விடயங்ளை தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version