நாட்டில் கடன் அட்டைகளுக்குக்கான (கிரெடிட் கார்ட் ) வட்டி விகிதத்தை வர்த்தக வங்கிகள் உயர்த்தியுள்ளமை மத்திய வங்கியின் அறிக்கையில் தெரியவந்துள்ளது.
இதன்படி வர்த்தக வங்கிகள் சில தமது கிரெடிட் கார்ட்டுக்கான வட்டியை 30 சதவீதமாக அறிவித்துள்ளன.
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கடந்த ஏப்ரல் 8 ஆம் திகதி, கடன் அட்டைகள் மீதான அதிகபட்ச வட்டி வீத வரம்புகளை நீக்குவதாக அறிவித்ததை அடுத்து, கிரெடிட் கார்ட் வட்டி 18% இலிருந்து 24% ஆக உயர்ந்த. இந்நிலையில் தற்போது வட்டி 30% ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேபோல் இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில், நாட்டில் செயல்பாட்டில் உள்ள (தேசிய பாவனா )கிரெடிட் கார்ட்டுகளின் எண்ணிக்கை 46,286 ஆக உள்ளதாகவும், இந்த கிரெடிட் கார்ட்டுகளின் மொத்தத் நிலுவைத் தொகை 4.9 பில்லியன் எஹூபா எனவும் மத்தியவங்கி தெரிவித்துள்ளது.
#SriLankaNews

