இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவி விலகல்

rtjy 30

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவி விலகல்

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெட்ரோலிய களஞ்சிய நிலையத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் தனது பதவியை பதவி விலகியுள்ளார்.

இது தொடர்பான கடிதத்தை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் அவர் கையளித்துள்ளார்.

இந்நிலையில், 14 மாதங்களுக்கு முன்னர் மிகவும் சவாலான காலக்கட்டத்தில் பதவியை ஏற்ற மொஹமட் உவைஸின் அர்ப்பணிப்பு மற்றும் சேவைக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர, உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக தாம் பதவி விலகுவதாக மொஹமட் உவைஸ் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version