மைத்திரிக்கு நீதிமன்று அழைப்பாணை!

Maithripala Sirisena

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டின் விசாரணையை இடைநிறுத்தி இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படுமா? இல்லை? குறித்த உத்தரவை எதிர்வரும் 14ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புலனாய்வுத் தகவல் கிடைத்தும் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அன்றைய தினம் மனுதாரர் மைத்திரிபால சிறிசேனவும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் மனுதாரரின் சட்டத்தரணிகளுக்கு இன்று (12) அறிவித்தது.

மைத்திரிபால சிறிசேனவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை நீண்ட நேரம் பரிசீலனை செய்த சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version