விபச்சாரவிடுதி தொடர்பில் 4 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!

1539338935phpNwmpsc

மட்டக்களப்பில் விபச்சாரவிடுதி நடத்திய குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட, மட்டு மாநகரசபையின்  முன்னாள் மேயர் சிவகீர்த்தாவிற்கு  நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டது.

குறித்த வழக்கு தொடர்பில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் நேற்று விசாரணையொன்றை  நடத்தியுள்ளார்.

வழக்கின் இறுதியில் 50 ஆயிரம் ரூபாயை தண்டப்பணமாக செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு முன்னாள் மாநகரசபை மேயரான சிவகீர்த்தாவின் வீட்டுடன் நடாத்திவந்த  தங்குவிடுதியில் இயங்கிவந்த விபச்சார விடுதியை  பொலிசார் முற்றுகையிட்டிடிருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தொடரப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட மேயர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். 4 வருடகாலம் கடந்த நிலையில் நேற்று  வழக்கு விசாரணையில்  தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

#SriLankaNews

Exit mobile version