7 48
இலங்கைசெய்திகள்

சாணக்கியனுக்கு வழக்கு தொடர்ந்து பிள்ளையான் விட்ட தவறு: நீதிமன்ற வழங்கிய அதிரடி உத்தரவு!

Share

சாணக்கியனுக்கு வழக்கு தொடர்ந்து பிள்ளையான் விட்ட தவறு: நீதிமன்ற வழங்கிய அதிரடி உத்தரவு!

மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு (R.Shanakiyan) முன்னாள் பிரதி அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனை (Sivanesathurai Chandrakanthan) 50,000 ரூபா வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்கிசை மாவட்ட நீதிமன்றம் இன்று (23) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், தன்னை அவமதிக்கும் வகையில் இரா. சாணக்கியன் கருத்து வெளியிட்டதாக கூறி அவருக்கு எதிராக கல்கிசை மாவட்ட நீதிமன்றத்தில் பிள்ளையான் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இவ்வழக்கு தொடர்பில், இன்று சாணக்கியன் கல்கிசை மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலையாகிய போது அவரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனும் முன்னிலையானார். எனினும் குறித்த வழக்கைத் தாக்கல் செய்த பிள்ளையான் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.

இதன்போது, எதிர்மறை தரப்பின் சட்டத்தரணி சுமந்திரன், இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இந்த நீதிமன்றத்துக்கு உடைமையாக்கும் அதிகாரம் இல்லை என்ற வாதத்தை முன்வைத்தார்.

அத்துடன் வழக்கு விசாரணைக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் கோப்புக்கள் சமர்ப்பிக்கப்படாத காரணத்தால், வழக்குத் தாக்கல் செய்த பிள்ளையானுக்கு, வழக்கு செலவீனமாக எதிர்த்தரப்புக்கு 50,000 ரூபாவினை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் குறித்த வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...