24 6628a15d791fb
இலங்கைசெய்திகள்

மைத்திரியின் தலைமைத்துவத்திற்கு பாரிய சவால்

Share

மைத்திரியின் தலைமைத்துவத்திற்கு பாரிய சவால்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (24) இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மொண்டகு சரத்சந்திர சமர்ப்பித்த முறைப்பாடு தொடர்பில் கொழும்பு மாவட்ட நீதிபதி திரு.சந்துன் விதான இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில், விசாரணை முடியும் வரை இந்த நிரந்தர தடை நடைமுறையில், இருக்கும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து அமைச்சர் மகிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தடை உத்தரவை நீடிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்கு இன்று (24) விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பிட்டுள்ளது.

குறித்த தடையுத்தரவானது எதிர்வரும் மே மாதம் 8 ஆம் திகதி வரை நீடிக்குமாறு நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து தாம் நீக்கப்பட்டமைக்கு எதிராக அமைச்சர்கள் தாக்கல் செய்த முறைப்பாடுகள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Share
தொடர்புடையது
28 1
உலகம்செய்திகள்

ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டம்!

மத்திய கிழக்கில் ஈரான் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டுடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்துகொள்ளப்பட...

27 1
செய்திகள்உலகம்

தெஹ்ரானில் உள்ள ஈரானின் இரகசிய நிலத்தடி பதுங்கு குழி அழிப்பு: இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்!

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில், ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான அலி கமேனிக்காக உருவாக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான...

26 2
செய்திகள்உலகம்

இந்தியப் பெருங்கடலில் ஈரானியக் கப்பல்கள்: இந்தியாவிலும் இலங்கையிலும் தஞ்சம், அமெரிக்காவுடனான மோதலில் திருப்பம்!

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் ஒரே காலப்பகுதியில் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள...

25 2
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகள்: டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான விடுபட்ட FBI ஆவணங்களை வெளியிட்டது அமெரிக்க நீதித்துறை!

ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களின் ஆரம்பகட்ட வெளியீட்டில் விடுபட்டிருந்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான...