சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய சபை அமர்வை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி புறக்கணித்திருந்தது.
இன்று காலை பாராளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.
நேற்று முன்தினம் எதிரணி உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை, சபை அமர்வில் பங்கேற்கப்போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment