1 12
இலங்கைசெய்திகள்

ராஜபக்சர்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ள வசந்த சமரசிங்க

Share

ராஜபக்சர்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ள வசந்த சமரசிங்க

ராஜபக்சர்களின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற அனைத்து ஊழல் மோசடிகள் தொடர்பிலும் மீண்டும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், கடந்த ஆட்சியில் சர்ச்சையை ஏற்படுத்திய அனைத்து குற்றச்சாட்டுகளும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, “அரசு விசாரணையைத் தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது. எதிரிகள் கலக்கமடைந்துள்ளனர்.

பிணைமுறி ஊழல், ஈஸ்டர் தாக்குதல், லசந்த விக்ரமதுங்க கொலை, தாஜுதீன் கொலை, எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட விடயம், 11 தமிழ் இளைஞர்கள் காணாமல் போனமை, கப்பல்களுக்கு உரம் ஏற்றுவது, எயார்பஸ் பேரம் ஆகியவை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உகாண்டாவை காட்டிவிட்டு துபாய் கணக்குகளுக்கு பணம் எப்படி மாற்றப்பட்டது என்பதை கண்டுபிடிக்க மாட்டோம் என நாமல் ராஜபக்ச நினைக்கிறார்.

அத்துடன், ரவி வித்யலங்காரவுடன் டீல் பேசி மறைக்கப்பட்ட கோப்புக்களை கண்டுபிடிக்க மாட்டோம் என்றும் நாமல் நினைத்துக் கொண்டிருக்கிறார்.

உகண்டாவில் மாத்திரமல்ல அபுதாபியில் இருந்தாலும் ராஜபக்சர்களின் ஊழல்கள் தொடர்பில் விசாரிப்போம்.

எனவே, திருடர்கள் வரிசையாக செய்து வந்த அனைத்து திருட்டுக்கள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.” என்றார்.

Share
தொடர்புடையது
500x300 23304852 4 fog
செய்திகள்விளையாட்டு

இந்தியா – தென்னாப்பிரிக்கா 4-வது டி20 போட்டி ரத்து: லக்னோவில் கடும் பனியால் பாதிப்பு!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில்...

MediaFile 5 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கொத்மலை – இறம்பொடை மண்சரிவு: பெண்ணொருவருடையது என சந்தேகிக்கப்படும் உடல் பாகம் மீட்பு!

கொத்மலை – இறம்பொடை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கிக் காணாமல் போனவர்களில் ஒரு பெண்ணுடையது...

23 658fd712815b0
இலங்கைசெய்திகள்

பேருந்து – முச்சக்கர வண்டி மோதிய விபத்தில் தாய் மற்றும் இரண்டு வயது குழந்தை பலி!

தெஹியத்தகண்டிய, முவகம்மன பகுதியில் இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

MediaFile 796x445 1
இலங்கைசெய்திகள்

பாதுகாப்பு அச்சுறுத்தல்: அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு!

வைத்தியசாலை வளாகத்தில் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, தமக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி...