லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை சிங்கள வித்தியாலயத்துக்கு அருகிலிருந்து – நாகசேனை வலகா தோட்டத்துக்குச் செல்லும் வீதியின் ஓரத்திலிருந்து சிசுவின் சடலம் ஒன்று லிந்துலை பொலிஸாரால் இன்று மீட்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
அப்பகுதியில் சென்ற சிலர் சிசுவின் சடலத்தை அவதானித்துள்ளனர். இதையடுத்து லிந்துலை பொலிஸ் நிலையத்துக்கு வழங்கிய தகவலையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
சிசு யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
சுமார் 6 மாத காலம் நிறைவடைந்த சிசுவின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட நீதிவானின் விசாரணைகளின் பின் பிரேத பரிசோதனைக்காக சிசுவின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#SriLankaNews
Leave a comment