மயங்கி வீழ்ந்து உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனோ!

covid

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையிலிருந்து யாழ்.நகரை அண்மித்த கொட்டடி பகுதியில் உள்ள கோயில் ஒன்றுக்கு சென்றிருந்த பெண் ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

இவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையில் இவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதியைச் சேர்ந்த 68 வயதான ஸ்ரீ ராஜேந்திரா சந்திரவதனா என்ற பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொட்டடியில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு சென்றிருந்த நிலையில் கோவில் வாசலில் திடீரென மயங்கி விழுந்து இறந்துள்ளார்.

இந்நிலையில் இறப்பின் பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் நேற்று திங்கட்கிழமை கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version