சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவரது ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
நேற்று (28) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனையில் அவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அதற்கமைய சபாநாயகர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, அவரின் நெருங்கிய தொடர்பாளர்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த புதன்கிழமை (26) வெலிகம மற்றும் வெலிபிட்டிய பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு பொது நிகழ்வுகளில் சபாநாயகர் கலந்துகொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை களுத்துறை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவிற்கும் நேற்றையதினம் (28) கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews
Leave a comment