மீண்டும் கொரோனா பரவல்! – பாடசாலைகள் தொடர்பில் அறிவிப்பு

school

மாணவருக்கோ, அல்லது அதிபர், ஆசிரியர் உள்ளிட்ட பணிக்குழாமினருக்கோ கொரோனா தொற்று பரவினாலும் பாடசாலைகள் மீள மூடப்படாது எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மாணவரொருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளானால், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்திவிட்டு, கற்பித்தல் செயற்பாடுகளை தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், பாடசாலை நடத்தும் விதம் தொடர்பான ஆலோசனைகள் அடங்கிய வழிகாட்டல்கள் எதிர்வரும் சனிக்கிழமை வெளியிடப்படும் என்றார்.

#SriLankaNews

Exit mobile version