download 6 1 10
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் தாண்டவமாடும் கொரோனா!

Share

யாழில் தாண்டவமாடும் கொரோனா!

யாழ்ப்பாணக் குடாநாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேருக்கு தனிமைப்படுத்தல் விடுதியில் வைத்து ஒட்சிசன் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் ஒருவர் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறச் சென்ற ஒருவருக்கு கொரோனாத் தொற் றுக்குரிய அறிகுறி காணப்பட்டதையடுத்து அவருக்குச் சோதனை மேற் கொள்ளப்பட்டது.

அதில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக விடுதிகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு கொரோனாப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது 3 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். அனைவரும் தனிமைப்படுத்தல் விடுதியில் வைத்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களிலும் இவ்வாறான நிலைமை ஏற்பட்டிருந்தது.

கொரோனாவின் திரிவு வைரஸால்  இத்தகைய பாதிப்பு உருவாகியிருந்தது. அதேபோன்று தற்போதும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் 5 பேருக்கு ஒட்சிசன் வழங்கப்பட்டு வருகின்றது. அவர்களில் ஒருவரது உடல் நிலை மோசமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 102
செய்திகள்இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, இலங்கை ரூபவாஹினி...

Untitled 101
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வத்தளை நாயக்ககந்த பாடசாலையில் புதிய முதல்வர் நியமனத்திற்கு எதிர்ப்பு போராட்டம்!

வத்தளை, நாயக்ககந்த பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க மகளிர் பாடசாலையான பாலிகா மகா வித்தியாலயத்திற்கு (குட்...

Untitled 100
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை: ஈரானின் மஷ்ஹத் நகரில் ரயில் சேவைகள் அதிரடி நிறுத்தம்!

ஈரானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான மஷ்ஹத்தின் (Mashhad) ஆளுநர், அந்த நகரில் உள்ள...

Untitled 99
செய்திகள்இலங்கை

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம்: தட்டுப்பாடின்றி வழங்க அமைச்சர் உறுதி!

உலகளாவிய சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் உயர்விற்கு இணையாக, இலங்கையிலும் உள்நாட்டு எரிவாயு விலைகள்...