சர்வதேச நாணய நிதியம் தொடர்பான அரசின் திட்டத்துக்கு எவரும் தடையேற்படுத்தக்கூடாது – என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
புத்தளத்தில் இடம்பெற்ற முக்கிய சந்திப்பொன்றில் கலந்துகொண்ட நிலையிலேயே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் நெருக்கடி ஏற்பாட்டுள்ள நிலையில், அரசு தற்போது சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கு முயற்சித்து வருகிறது. இந்தநிலையில் அரசின் இந்த முயற்சிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள அரசு சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டும்.
இல்லாவிட்டால் அதற்கான மாற்று திட்டத்தை முன்வைக்க வேண்டும் என கடந்த நாடாளுமன்ற அமர்வின்போது ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment