பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுக!

825408982sri lankan parliament

பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மற்றும் சபாநாயகரிடம் சுதந்திர மக்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் எழுந்துள்ள சிக்கல் நிலை குறித்து கலந்துரையாடுவதற்கு உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறும் குறித்த கடிதத்தில் கூட்டமைப்பு கோரியுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குச் சீட்டு விநியோகத்தை காலவரையறையின்றி ஒத்திவைக்கும் தீர்மானம் ஜனநாயகத்திற்கு பாரிய அச்சுறுத்தல் என சுதந்திர மக்கள் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலைமையை நிவர்த்தி செய்வதற்கும், நிர்வகிப்பதற்கும் அரசாங்கத்தின் கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் உச்ச சட்ட சபையின் பிரதிநிதிகளின் பொறுப்பு இருப்பதால், நிலையியற் கட்டளை 16ன் கீழ் பாராளுமன்றத்தை கூட்டுமாறு பிரதமர் மற்றும் சபாநாயகரிடம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version