கடற்படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள குறிகட்டுவான் துறைமுகத்தில் அரச மரக்கன்று ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
அரச மரம் இருக்கும் இடமெங்கும் புத்தர் வந்து குடியேறுவதால், வருங்காலத்தில் இங்கும் ஒரு புத்தர் சிலை வைப்பதற்கான முன்னேற்பாடாக இருக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
தமிழரின் நிலங்களை திட்டமிட்டு பிடுங்குவதற்கு புத்தரை துணைக்கு எடுத்திருக்கும் சிங்கள அரசின் அடுத்த கட்ட நடவடிக்கையாகவே இதை நோக்க வேண்டியிருக்கிறது.
காரணம், நயினாதீவு உள்ளிட்ட தீவகப் பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ளும் பயணிகள் இறங்கு துறையாக குறிகட்டுவான் விளங்குகின்றது. அதுமட்டுமல்லாது சிங்கள சுற்றுலாப் பயணிகளும் இந்தத் துறைமுகம் ஊடாகவே பயணிக்கின்றனர்
இதனால் குறித்த நுழைவாயில் பகுதியில் அரச மரம் ஒன்றை வைத்து உருவாக்கி விட்டு காலப்போக்கில் அங்கே ஒரு புத்தர் சிலையை வைத்து வழிபாடு ஏற்பாடுகள் செய்யவதன் மூலம் சிங்கள மக்கள் மனதில் இவை பௌத்த பூமி என்ற மாய தோற்றத்தை உருவாக்கவே அரசு முயற்சி செய்கின்றது.
தற்போது தமிழர் தாயகத்தில் இந்து ஆலயங்களை அழித்து புத்தர் சிலைகளை அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் குறிகட்டுவான் துறைமுகத்துக்கான நுழைவாயிலில் இந்த அரச மரம் வைக்கப்பட்டுள்ளமையும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், நயினாதீவிலுள்ள விகாராதிபதி தனியார் படகுச் சேவையை நடத்தி வருகின்றார். அவரது படகுக்கான விற்பனைச்சீட்டில் நயினாதீவின் பெயர் இல்லாமலாக்கப்பட்டு நாகதீபம் என்று அச்சிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
#srilankaNews
Leave a comment