வடமேல் மாகாணத்தில் வைக்கப்பட்டுள்ள அனுதாப பதாகையில் வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரேவின் படத்துக்குப் பதிலாக ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸமில்லின் படம் பொறிக்கப்பட்டுள்ளது.
பதாகையில் பெயர் சரியாக இருந்தபோதிலும் படம் மாறியுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தனது 83 ஆவது வயதில் இன்று காலமானார்.
அவருக்கு அனுதாபம் தெரிவிக்கும் முகமாக வடமேல் மாகாணத்தில் பல இடங்களில் அனுதாப பதாகை வைக்கப்பட்டுள்ளன.
வாரியபொல பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் மற்றும் செயலாளர் உள்ளிட்ட பணியாள் தொகுதியினரும் இறப்புக்கு அனுதாபம் தெரிவித்து பதாகை வைத்துள்ளனர்.
#SriLankaNews