தொடர் மழை! – வான்கதவுகள் திறப்பு

WhatsApp Image 2022 08 03 at 10.24.43 AM

மலையகத்தில் காலநிலை சீர்கேட்டின் காரணமாக பெய்து வரும் தொடர் மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் தொடர்ந்தும் இன்றைய தினமும் (03.08.2022) வான்கதவுகள் இரண்டு திறக்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் மூன்று வான்கதவுகள் திறந்து விடப்பட்டிருந்தன. நேற்யை தினம் இரண்டு கதவுகள் திறந்து விடப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினமுமு் இரண்டு வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.

அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அத்தோடு மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டதன் காரணமாக சென். கிளயார் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.

இதேவேளை, டெவோன் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

#SriLankaNews

Exit mobile version